New Delhi: புதுடில்லி: டில்லி மற்றும் என் சி ஆர் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை சில நொடிகளுக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
தலைநகர் டில்லியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சோன்பேட்டில், மாலை 3.37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிகளிலும், ஹரியானவை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
டில்லி, குர்கான், நொய்டா, காசியாபத் ஆகிய இடங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம் குறித்து, அந்த பகுதி மக்கள், ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
கடந்த மே மாதம், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கத்திற்கு பிறகு, டில்லி மற்றும் சில வட இந்திய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.