கத்ரீனா கைஃப் இண்ஸ்டாகிராம் போட்டோ (Image courtesy: katrinakaif)
ஹைலைட்ஸ்
- இந்த பயோபிக்கை ரேவதி சர்மா இயக்குகிறார்
- கத்ரீனா கைஃப் பரத் பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.
- கத்ரீனா கைஃப் கடைசியாக நடித்து வெளியான படம் ஜீரோ
New Delhi: தடகள வீராங்கனையான பிடி. உஷாவின் பயோபிக்கில் நடிக்க கத்ரீனா உள்ளதாக தகவல் வெளியானதில் இருந்து கத்ரீனா கைஃப் ட்ராண்டாகியுள்ளார். பிங்க்வில்லா வெளியிட்ட அறிக்கையின் படி தடகளவீராங்கணை பயோபிக்கில் 35 வயது ஜீரோ பட ஹீரோயின் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், இது குறித்து கத்ரீனா கைஃப் எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.
பிங்க்வில்லா அறிக்கையில் பல மொழிகளில் படமாக்கப்படும் என்று பிரியங்கா சோப்ரா குத்துச் சண்டை வீராங்கணையான மேரி கோம் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தது. ஆனால், நடிகை பிரியங்கா சோப்ரா இந்த திட்டத்துக்கு பதில் தெரிவிக்கவில்லை என்பதால் அந்தப்படம் கைவிடப்பட்டது.
பிடி. உஷாவின் பயோபிக்கின் இயக்குநர் ரேவதி சர்மா இரண்டு வாரங்களுக்கு முன் கத்ரீனா கைஃபை சந்தித்து பேசியதாகவும் அதில் நடிக்க கத்ரீனா கைஃப் விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளது. கத்ரீனா கைஃப் சினிமா பயணத்தில் முதல் பயோபிக்காக இதுஇருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கத்ரீனா கைஃப் சல்மான்கானுடன் இணைந்து நடித்த பாரத் திரைப்படம் வெளியாகவுள்ளது. அக்ஷய் குமார் முக்கிய ரோலில் நடிக்கும் சூர்வாண்ஷிஷியுடன் ஒப்பந்தம் செய்தார்.