This Article is From Sep 14, 2020

அமைச்சர் வளர்மதி பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் ரகளை! சேர்கள் பறந்தன, 2 பெண் நிர்வாகிகளுக்கு காயம்!!

சரியான நபருக்கு பதவி வழங்கப்படவில்லை என்று கூறி சிலர் செய்த ரகளையில் மாவட்ட செயலாளர் பரமசிவம் தாக்கப்பட்டார்

அமைச்சர் வளர்மதி பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் ரகளை! சேர்கள் பறந்தன, 2 பெண் நிர்வாகிகளுக்கு காயம்!!

அமைச்சர் வளர்மதி பங்கேற்ற கூட்டத்தில் ரகளை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரகளையில் 2 பெண் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். மாநில பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி பங்கேற்றார். 

கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தைச் சேர்ந்தவர் சுமார் 100 பேர் மண்டபத்திற்குள் புகுந்து மேடையை நோக்கிச் சென்றனர். அப்போது, தகுதியான நபருக்கு பதவி வழங்கப்படவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  மண்டபத்தில் இருந்த நாற்காலிகளை தூக்கி வீசனர். ஒரு கட்டத்தில் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் பரஞ்சோதியை தாக்கினர். 

இதனைப் பார்த்த அதிமுக உறுப்பினர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறினறர். மண்டபத்தில் ரகளை ஏற்படுவதைக் கண்ட போலீசார் அமைச்சர் வளர்மதியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இருப்பினும் சேர்களை வீசி தாக்கியதில் இரண்டு பெண் நிர்வாகிககள் காயமடைந்தனர். அவர்களும்,  பரஞ்சோதியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,  மீனவர் அணியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனக்கு அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும், ஆனால் அவருக்கு அந்த பதவி வழங்கப்பவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த கண்ணதாசனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் மேற்கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.