বাংলায় পড়ুন Read in English
This Article is From Jun 20, 2019

‘நடிகை… எம்.பி… இப்போ மனைவி’- கலக்கும் நுஷ்ரத் ஜகான்!

நுஷ்ரத் ஜகான் மற்றும் நிகில் ஜெயின் திருமண வரவேற்பு கொல்கத்தாவில் ஜூலை 4 நடைபெறவுள்ளது. பல சினிமா மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from IANS)

திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

New Delhi:

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும் நடிகையுமான நுஷ்ரத் ஜகான் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரான நிகில் ஜெயினை துருக்கியில் திருமணம் செய்து கொண்டார்.  நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே  திருமணத்தில் கலந்து கொண்டனர். 

தன்னுடைய திருமணப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

Advertisement

நுஷ்ரத் ஜகான் மேற்கு வங்கம் பஷிரத் என்னுமிடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நுஸ்ரஸ் ஜகான் சிவப்பு நிற லெஹன்கா உடையை திருமண உடையாக அணிந்திருந்தார். 

திருமணத்தில் நஷ்ரத் ஜகானின் பெற்றோர்கள், சகோதரி மற்றும் நெருங்கிய உறவினர்கள் போர்ட் டவுணுக்கு ஞாயிறு அன்று வந்தடைந்தனர். பெங்கால் நடிகை மிமி சக்கரவர்த்தி மணப்பெண் தோழியாக இருந்தார். 

Advertisement

இதற்கு முன் திரிணாமூல் காங்கிரஸ் எம்பியான நுஷ்ரத் ஜகான், மிமி சக்கர்வர்த்தி இருவர் மாடர்ன் உடையில் நாடாளுமன்றம் சென்றதற்காக இணையத்தில் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நுஷ்ரத் ஜகான் மற்றும் நிகில் ஜெயின் திருமண வரவேற்பு கொல்கத்தாவில் ஜூலை 4 நடைபெறவுள்ளது. பல சினிமா மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement