This Article is From Aug 09, 2018

முத்தலாக் சட்டத் திருத்தம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண், 3 முறை தலாக் என்று கூறி விவாகராத்து செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது

முத்தலாக் சட்டத் திருத்தம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஹைலைட்ஸ்

  • ‘இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’ நிறைவேறியது
  • முத்தலாக் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
  • முத்தலாக் மசோதா மூலம் பாலின சமத்துவம் நிலைநாட்டப்பட வாய்ப்புள்ளது
New Delhi:

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண், 3 முறை தலாக் என்று கூறி விவாகராத்து செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. மேலும், முத்தலாக் முறைக்கு தடைக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு, ‘இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், முத்தலாக் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டி மத்திய அரசிடன் கோரிக்கை வைக்கப்பட்டது. முத்தலாக் மசோதா மூலம் பாலின சமத்துவம் நிலைநாட்டப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருந்தது.

எனவே, முத்தலாக் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்குவது நீதிமன்றத்தின் முடிவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 

.