This Article is From Jul 30, 2019

‘’இஸ்லாமிய சகோதரிகள் தானாக முன்வந்து பாஜகவில் சேர்கிறார்கள்’’ : தமிழிசை பேட்டி!!

முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் அதனை நிறைவேற்றுவதற்கு பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

‘’இஸ்லாமிய சகோதரிகள் தானாக முன்வந்து பாஜகவில் சேர்கிறார்கள்’’ : தமிழிசை பேட்டி!!

பாஜக சார்பாக தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதால் சிறுபான்மையினர் மத்தியில் பாஜகவுக்கு வரவேற்பு இருப்பதாகவும், இஸ்லாமிய சகோதரிகள் தானாக முன் வந்து பாஜகவில் சேர்வதாகவும் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

முஸ்லிம் கணவன் அவரது மனைவியை மூன்று முறை தலாக் என்று கூறி உடனடியாக விவகாரத்து செய்வதற்கு தடை விதிக்கும் வகையில், முந்தைய மோடி ஆட்சிக் காலத்தின்போது மசோதா கொண்டு வரப்பட்டது. இதனால் முஸ்லிம் ஆண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

இதன்பின்னர் புகாருக்கு ஆளான கணவர்களுக்கு ஜாமீன் அளிக்கலாம் என்பது உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடையாது என்பதால், மசோதா நிலுவையில் இருந்தது. பின்னர் தேர்தலையொட்டி மக்களவை கலைக்கப்பட்டதால் மசோ காலாவதி ஆனது.

இந்நிலையில் மோடி அரசு மீண்டும் பொறுப்பு ஏற்று முதல் கூட்டத்தொடர் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் மீண்டும் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கலானது.

இந்த நிலையில் முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதால் சிறுபான்மையினர் மத்தியில் பாஜகவுக்கு வரவேற்பு இருப்பதாகவும், இஸ்லாமிய சகோதரிகள் தானாக முன் வந்து பாஜகவில் சேர்வதாகவும் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து காஞ்சிரபுரம் மாவட்ம் பள்ளிக்கரணையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

முத்தலாக் விவகாரம் சிறுபான்மை பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அதை நாங்கள் உறுப்பினர் சேர்க்கையிலே பார்க்கிறோம். இஸ்லாமிய சகோதரிகள் தாமாக முன் வந்து உறுப்பினர்களாக சேர்ந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

.