हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 26, 2019

பசுமாடு ஆக்ஸிஜனை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடுகிறது: உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

முதலமைச்சர் பேச்சு குறித்த முதலமைச்சரின் அலுவலக அதிகாரி உத்தரகாண்ட் மாநிலத்தில் மக்கள் பசுவின் மீது உள்ள பொதுவான நம்பிக்கை குறித்து பேசியதாக தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Edited by

டெஹ்ராடூனில் நடந்த ஒரு விழாவில் திரிவேந்திர சிங் ராவத் பேசினார்.

Dehradun:

உத்திரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்  பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. மேலும் பசு மாட்டை தடவிக்கொடுத்தால் சுவாசப் பிரச்னைகள் குணமாகிறது என்று கூறினார். 

டெஹ்ராடூனில் நடந்த ஒரு விழாவில் திரிவேந்திர சிங் ராவத் பசு மாட்டு பால் மற்றும் சிறுநீரின் மருத்துவ பண்புகளை புகழ்ந்துரைக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. 

வீடியோவில், மாடுகள் ஆக்ஸிஜனை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை மட்டுமே வெளியேற்றுகின்றன எனக் கூறுகிறார். ஒரு பசுவை தடவிக் கொடுப்பதன் மூலம் சுவாசப் பிரச்னைகளை குணப்படுத்த முடியும் என்றும், அதே சமயம பசுவுடன் நெருங்கமாக இருந்தால் காசநோயை குணப்படுத்த முடியும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் பேச்சு குறித்த முதலமைச்சரின் அலுவலக அதிகாரி உத்தரகாண்ட் மாநிலத்தில் மக்கள் பசுவின் மீது உள்ள பொதுவான நம்பிக்கை குறித்து பேசியதாக தெரிவித்தார். 

Advertisement

கர்ப்பிணிப் பெண்கள் பாகேஸ்வர் மாவட்டத்தில் உள்ள கருத் கங்கா என்ற நதியின் நீரைக் குடித்தால் சிசேரியன் பிரசவத்தை தவிர்க்கலாம் என்று உத்தரகாண்ட் பாஜக தலைவரும் நைனிடால் சட்டமன்ற உறுப்பினருமான அஜய் பட் கூறிய சில நாட்களுக்கு முன் பேசியது குறிப்பிடத்தக்கது. 

Advertisement