This Article is From Sep 26, 2019

650 மி.கி பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் டெங்கு குணமாகிவிடும் - முதலமைச்சர் திரிவேந்திர சிங்

“650 மி.கி பாராசிட்டமல் மருந்தினை எடுத்துக் கொண்டு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டால் நோய் குணமாகிறது” என்று முதல்வர் டெஹ்ராடூனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

650 மி.கி பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் டெங்கு குணமாகிவிடும் - முதலமைச்சர் திரிவேந்திர சிங்

உத்தரகாண்ட் மாநிலத்தில் 4,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் (PTI File)

Dehradun:

உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாராசிட்டமால் மருந்தினை 500 மில்லி கிராம்க்கு பதிலாக 650மில்லி கிராம் எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் கொசுக்களால் பரவும்  தொற்று நோய் அதிகரித்துள்ளதே...? என்ற கேள்விக்கு முதலமைச்சர் இவ்வாறாக பதிலளித்துள்ளார். 

“650 மி.கி பாராசிட்டமல் மருந்தினை எடுத்துக் கொண்டு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டால் நோய் குணமாகிறது” என்று முதல்வர் டெஹ்ராடூனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மட்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 4,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

டெஹ்ராடூனில் இருந்து மட்டும் இதுவரை 3,000பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹல்த்வானியில் 1,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுவரை 6 பேர் மட்டும் இறந்துள்ளனர் என்று முதல்வர் தெரிவித்தார். அவர்களில் 4 பேர் டேராடூனிலும் இரண்டு பேர் ஹல்த்வானியிலும் உள்ளனர்.

மாநில சுகாதாரத்துறை செப்டம்பர் 17 அன்று இறந்தவர்களின் எண்ணிக்கை 8 என்று அறிவித்தது. 

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளிகளை சந்தித்தாகவும் சிகிச்சையின் மூலம் அவர்கள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

.