This Article is From Sep 26, 2018

உயரும் டீசல் விலை; தமிழக லாரி உரிமையாளர்கள் கட்டண உயர்வு!

தமிழகத்தில் டீசல் விலை 80 ரூபாயைத் தொடப் போகிறது. இந்நிலையில் தமிழக லாரி உரிமையாளர், சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்

உயரும் டீசல் விலை; தமிழக லாரி உரிமையாளர்கள் கட்டண உயர்வு!

தமிழக லாரி உரிமையாளர்கள் எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்

Chennai:

தமிழகத்தில் டீசல் விலை 80 ரூபாயைத் தொடப் போகிறது. இந்நிலையில் தமிழக லாரி உரிமையாளர், சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். 

தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடுகின்றன. அவர்கள் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தினால், மக்கள் வாங்கும் அன்றாட பொருட்களின் விலையும் பன்மடங்கு உயரும் ஆபத்து இருக்கிறது.

இந்த கட்டண உயர்வு குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் யுவராஜ், ’10 லாரிகள் வைத்திருந்தால், அதில் மூன்றைத் தான் இயக்க முடிகிறது. மற்றவைகளெல்லாம் டீசல் விலை உயர்வு காரணமாக இயக்க முடியாத நிலையில் இருக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் டீசலுக்கான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு அப்படிப்பட்ட முடிவை எடுக்கவில்லை. எங்கள் வியாபாரத்தை நாங்கள் காப்பாற்றிக் கொள்ள சேவைக் கட்டணத்தை ஏற்றுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கூறியுள்ளார். 

சரக்கு லாரிகளின் சேவைக் கட்டண உயர்வு, உள்ளுர் காய்கறி சந்தைகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. சில காய்கறிகளின் விலை, 15 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் குறித்து மைலாப்பூரின் கீதா செந்தில்குமார், ‘முன்னரெல்லாம் 60 ரூபாய்க்கு ஒரு வராத்துக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிவிடுவேன். ஆனால் இப்போது 150 ரூபாய் தேவைப்படுகிறது’ என்று வருத்தப்படுகிறார். 

அதேபோல டீசல் கார் வைத்துள்ள திருமால், ‘காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது 1000 ரூபாய்க்கு டீசல் போட்டு, ஒரு வாரத்துக்கு சவாரி ஓட்டுவேன். இப்போதோ, 1000 ரூபாய்க்கு டீசல் போட்டால் 3 நாளைக்குள் தீர்ந்துவிடுகிறது. கடன் வாங்கித்தான் வண்டி ஓட்ட வேண்டியதுள்ளது’ என்று தன் நிலைமை குறித்து விவரிக்கிறார். 

.