This Article is From Jul 20, 2018

நாடு முழுவதும் காலவறையற்ற லாரி ஸ்ட்ரைக் இன்று தொடங்கியது

டீசல் விலை குறைப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் கால வறையற்ற லாரி ஸ்ட்ரைக் இன்று தொடங்கியது.

Mumbai:

மும்பை: டீசல் விலை குறைப்பு, சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கால வறையற்ற லாரி ஸ்ட்ரைக் இன்று தொடங்கியது. 

கடந்த மே மாதம் 17 - ஆம் தேதி அறிவித்தபடி, இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த 9.3 மில்லியன் உறுப்பினர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

"மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்காரியை நேற்று சந்தித்ததில், முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் ப்யூஷ் கோஷலை நேற்று இரவு 10.30 மணி அளவில் சந்தித்தோம்" என்று அகிக இந்தியா மோட்டார் காங்கிரஸ் சங்க தலைவர் பால் மல்கித் சிங் தெரிவித்துள்ளார். 

நேற்று நடைப்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால்,  திட்டமிட்டபடி ஜூலை 20 ஆம் தேதியான இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தம் தொடங்கும் என மல்கித் சிங் அறிவித்தார். 

டீசல் விலை நிர்ணயத்தை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும்,  லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, கால வறையற்ற வேலை நிறுத்தத்தில் லாரி ஓட்டுனர்கள் ஈடுபட்டுள்ளனர்

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்காரியின் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, லாரிகள் வேலை நிறுத்தம் குறித்த பிரச்சனைகளுக்கு, உடனடி தீர்வு கொண்டு வர முடியாது. எனினும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சங்கம் அளித்த கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்று போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு, நாட்டில் உள்ள பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளனர். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

.