Read in English
This Article is From Jan 14, 2019

கனட பிரதமரை போலவே உருவம் கொண்ட ஆப்கானின் கல்யாண சிங்கர்!

ஆப்கானில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பாடி திறமையை வெளிப்படுத்தும் அப்துல் சலாம் மஃப்தூன் அப்படியே ட்ரூடோவை போலவே உள்ளார்.

Advertisement
விசித்திரம்

சமூக வலைதளங்களில் சிலர், இவர் பாலிவுட் படங்களில் வருவதை போல ட்ரூடோவின் தொலைந்து போன இரட்டையராக இருக்கலாம் என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.

Kabul, Afghanistan:

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எல்லாருக்குமே பரிட்சையமான நபர். அவரை அப்படியே அச்சு அசலாக நகலெடுத்தது மாதிரியான ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் போர்க்கள பூமியான ஆப்கானிலிருந்து ஒருவர் என்றால் சொல்லவா வேண்டும். ஆப்கானில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பாடி திறமையை வெளிப்படுத்தும் அப்துல் சலாம் மஃப்தூன் அப்படியே ட்ரூடோவை போலவே உள்ளார்.

கிராமத்தில், கல்யாண வீடுகளில் பாடி வந்த 29 வயதான மஃப்தூன், ட்ரூடோவை போலவே இருப்பதால் மக்களிடம் அவருக்கு மவுசு அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளார். 

மஃப்தூன் இது குறித்து கூறும் போது '' என் பெயரையே எல்லாரும் மறந்துவிட்டார்கள். என்னை ட்ரூடோ என்றே அழைக்கிறார்கள். அவரை நான் பார்த்தது இல்லை. இப்போதுதான் சமூக வலைதளங்களில் பார்க்கிறேன்'' என்கிறார் 

Advertisement

மேலும், "இந்த ஒரு உத்வேகமே என்னை போட்டியில் பாதி வெல்ல வைத்தது" என்று கூறுகிறார். சமூக வலைதளங்களில் சிலர், இவர் பாலிவுட் படங்களில் வருவதை போல ட்ரூடோவின் தொலைந்து போன இரட்டையராக இருக்கலாம் என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த டிவி நிகழ்ச்சியின் டாப் 8 போட்டியாளர்களில் ஒருவராக மஃப்தூன் உள்ளார். ஃபைனல்ஸ், மார்ச் 21ம் தேதி நடக்கவுள்ளதாம். அதிலும் வெற்றி பெறுவார் என நம்புகிறார்கள். இவரை ஆப்கானின் ஜஸ்டின் பீபர் என்று பாராட்டுகிறார்கள். 

Advertisement

தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளோடு திருமண விழாக்களில் பாடி வரும் மஃப்தூன் ''நான் ஏழை , ட்ரூடோ விரும்பினால் அவரை நான் சந்திக்க ஆசைப்படுகிறேன்'' என்று கூறியுள்ளார்.

Advertisement