This Article is From Jan 03, 2019

"4 மாதத்தில் சிரியாவை விட்டு அமெரிக்கா வெளியேறும்" - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்னும் நான்கு மாத காலத்தில் மொத்த அமெரிக்க படைகளும் சிரியாவை விட்டு வெளியேறும் என்று உறுதியளித்துள்ளார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்னும் நான்கு மாத காலத்தில் மொத்த அமெரிக்க படைகளும் சிரியாவை விட்டு வெளியேறும் என்று உறுதியளித்துள்ளார். இதனை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.

சென்ற டிசம்பர் 19ம் தேதி அமெரிக்க படைகளை சிரியாவிலிருந்து திரும்ப பெறுவது என்ற முடிவை அதிபர் ட்ரம்ப் எடுத்தார்.  கடந்த வருடம் ஐஎஸ்ஐஎஸ் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது என்ற அறிவிப்பு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ட்ரம்பின் அதிரடி முடிவுகளால் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ஜான் கெல்லி பதவி விலகினார். 

இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப் '' யாராலும் முடியாவிட்டால் ட்ரம்பால் முடியும். ஐஎஸ்ஐஎஸ் வெளியேறிவிட்டார்கள். அத்னால் அமெரிக்க படைகளை மெதுவாக திரும்ப பெறுகிறோம். அவர்கள் அவர்களது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கட்டும்'' என்றார்.

மேலும் சில போலி மீடியாக்கள் தனது வேலைகளை ஒழுங்காக செய்யத்தகுதியில்லாத அதிகாரிகள் விலகுவதை தவறாக சித்தரிக்கின்றன. நான் அவர்களிடம் கூறியதைதான் கூறுகிறேன் ''எனக்கு சரியென்ற உத்திகளை நான் கட்டாயம் செய்வேன்'' என்றார்.

அதிபர் ட்ரம்பின் ஈராக் பயணத்தின் போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது அமெரிக்க ராணுவ தளபதியிடம் அதிபர் ட்ரம்ப் படைகளை திரும்ப பெற போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் படைகளை திரும்ப பெறுவேன் என்றதால் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் பதவி விலகினார். அவர் ஐஎஸ்ஐஎஸ் குறித்த எச்சரிக்கைகளை எடுத்து கூறியும் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.