Read in English
This Article is From Jan 18, 2019

டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் அதிபர் ட்ரம்ப்!

8 லட்சம் அமெரிக்க பணியாளர்கள் சம்பளமின்றி வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் சூழல் அமெரிக்காவில் உருவாகியுள்ளது.

Advertisement
உலகம்

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை கடைசி நேரத்தில் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

Washington:

டாவோஸில் நடைபெறும்  உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். வாஷிங்டனில் நடந்துவரும் அரசு முடக்கம் தொடர்பான விஷயங்களை சமாளிக்கும் வேலை இருப்பதால், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

8 லட்சம் அமெரிக்க பணியாளர்கள் சம்பளமின்றி வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் சூழல் அமெரிக்காவில் உருவாகியுள்ளது. இந்நிலையில் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை கடைசி நேரத்தில் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், வர்த்தக பிரதிநிதி ராபர்ட், அதிபரின் உதவியாளர் கிறிஸ் ஆகிய அமெரிக்க அதிகாரிகளின் பயணமும் ட்ரம்போடு சேர்த்து ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்ஸி பெலோசி அரசு அலுவலல்கள் முடங்கியுள்ளதால் தனது ஆப்கான் பயணத்தை ரத்து செய்தார். அதன் பின்னரே ட்ரம்ப்பும் இந்த முடிவை எடுத்தார் என்று கூறப்படுகிறது.

"கோரிக்கை ஏற்கப்படும் வரை தொடர்ந்து அரசு முடங்கும்" என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதனால் பல அரசு ஒப்பந்ததாரகளும் வேலை இல்லாமல் உள்ள சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

ஜனநாயக கட்சியினர், மெக்ஸிகோ சுவருக்கு பணம் ஒதுக்குவதை எதிர்த்ததற்காக அரசை முடக்குவதாக ட்ரம்ப் அறிவித்தார்.

தற்போது டாவோஸ் பயணத்தையும் ரத்து செய்துள்ளார் ட்ரம்ப்.

Advertisement