This Article is From Jan 24, 2019

"அரசு முடக்கம் முடிவுக்கு வந்தால் தான் ஆண்டு உரை" - ட்ரம்ப்

ட்ரம்ப் சுவர்கட்ட 5 பில்லியன் டாலர் கேட்டதால், 33 நாட்களாக அரசை முடக்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ஆண்டு உரையை அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

Washington:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ஆண்டு உரையை அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக மாகாணங்களுக்கான அவை தலைவர் நான்சி பெலோசி, அவையில் உரை நிகழ்த்த கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்டேன் என்று ட்ரம்ப் தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

"நான்சி தனது மனநிலையை அரசை முடக்கியதால் மாற்றிக்கொண்டார். அதன்பின் தான் நான் உரை வழங்குவதாக ஒப்புக் கொண்டேன்" என்றார்.

வேறு ஒரு இடத்தில் தனியாக இந்த உரையை நிகழ்த்த நான் விரும்பவில்லை. வரலாற்று சிறப்புமிக்க இந்த அவையில் தான் இதனை நிகழ்த்த வேண்டும் என்று கூறியுள்ளதாக ட்ரம்ப் கூறினார்.

pfrv87dg

இந்த உரை செவ்வாயன்று திட்டமிடப்பட்டிருந்தது. நான்சியை கட்டாயப்படுத்தி இந்த உரையின் தேதியை ட்ரம்ப் மாற்ற சொல்லியதாக கூறப்படுகிறது. அரசு முடங்கியது என்பதை எப்போது திரும்பப் பெறப்படுகிறதோ அப்போது இந்த உரை நிகழ்த்தப்படும். நேரம், தேதி, இடம் முக்கியமாக இந்த நிகழ்வில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நான்சி ட்ரம்பின் எதிர்கட்சியாக இருப்பதால், "ட்ரம்ப்பை அவையில் பேச அனுமதிக்க மாட்டேன்" என்று கூறினார்.

ட்ரம்ப் சுவர்கட்ட 5 பில்லியன் டாலர் கேட்டதால், 33 நாட்களாக அரசை முடக்கியுள்ளார்.

.