This Article is From Jul 18, 2018

ஈரான் கச்சா எண்ணெய் விவகாரம்: என்ன செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி?

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கைவிட்டால், இந்தியா அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்

ஈரான் கச்சா எண்ணெய் விவகாரம்: என்ன செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி?

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்து இருக்கும் விவகாரத்தில், இந்தியா எந்த வித நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையெனில் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் எச்சரித்துள்ளார்.

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கைவிடுமாறு பிற நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடி என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கைவிடுவதன் மூலம் ,இந்தியாவிற்கு அதிக செலவுகள் ஏற்படும். அதே நேரம், அமெரிக்க அதிபரின் தடைகள் மீதான மிரட்டலை விடுத்து, இந்திய அமெரிக்க உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

dk4o66b8

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கைவிட்டால், இந்தியா அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதன் மூலம், அமெரிக்க கச்சா எண்ணெய் இந்திய சந்தையில் நுழைவதற்கு பெரும் வாய்ப்புண்டு.

இந்நிலையில், அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய பிறகு ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்தியாவின் எண்ணெய் தேவைகள் மிகவும் வேகமாக வளர்ந்து வருவதால், அந்த சந்தையைக் கைப்பற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ள நிலையில், மோடி எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.