This Article is From Dec 19, 2018

அமெரிக்க பள்ளிகளில் துப்பாக்கிச்சூட்டை தடுக்க துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்!

அமெரிக்க அதிபரால் நியமிக்கப்பட்ட பாதுகாப்புக் குழு அமெரிக்காவில் உள்ள‌ பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு அதிகமாக நடப்பதால் அனைத்து பள்ளிகளிலும் ஒரு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பாளர் இருப்பார்

அமெரிக்க பள்ளிகளில் துப்பாக்கிச்சூட்டை தடுக்க துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்!
Washington:

அமெரிக்க அதிபரால் நியமிக்கப்பட்ட பாதுகாப்புக் குழு அமெரிக்காவில் உள்ள‌ பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு அதிகமாக நடப்பதால் அனைத்து பள்ளிகளிலும் ஒரு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பாளர் இருப்பார் என்று கூறியுள்ளது.

ப்ளோரிடாவில் ஒரு முன்னாள் மாணவன் துப்பாக்கியால் 17 மாணவர்களை சுட்டுக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பல துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிரான போர்கள் வெடித்தன.

இந்த சம்பவம் குறித்து 180 பக்க அறிக்கை ஒன்றை ஆணையம் சமர்பித்தது. அதில் பெரும்பாலானோர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வைத்திருக்கும் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களுக்கு பதிலாக பள்ளிகளில் பாதுகாப்புக்கு ஆசிரியர்களிடமே துப்பாக்கி தரலாம் என்ற வாதமும் முன் வைக்கப்பட்டுள்ளது. அவரச உதவிக்கு அது தேவைப்படும் என்ற நோக்கில் இந்த கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களில் போலீஸ் நடவடிக்கை தாமதமாகவும், கிராமங்களிலும் போலீஸ் வருவதற்கு தாமதமாகும் என்பதால் வன்முறையை தடுக்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆணையம் அறிக்கையில் ''வலிமையான பள்ளி பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை நிலை நாட்ட வேண்டும்'' என்று கூறியுள்ளது.

1999ம் ஆண்டிலிருந்து 2,19,000 அமெரிக்க மாணவர்கள் துப்பாக்கிசூடு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தகவல்கள் தெரிவித்துள்ளன.

.