This Article is From Nov 03, 2018

ஈரான் மீதான தடைக்கு ஹாலிவுட் ஸ்டைலில் ஃபர்ஸ்ட் லுக் விட்ட ட்ரம்ப்!

"சேங்ஷன்ஸ் ஆர் கம்மிங்" (SANCTIONS ARE COMING) ஸாம்பிக்கள் சீரிஸில் வரும் பன்ச் டயலாக்கான "winter is coming." போன்று உள்ளது

ஈரான் மீதான தடைக்கு ஹாலிவுட் ஸ்டைலில் ஃபர்ஸ்ட் லுக் விட்ட ட்ரம்ப்!

"எங்களின் ட்ரேட்மார்க் லோகோவை எந்த அரசியல் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்" - ஹச்.பி.ஓ

Washington:

பொருளாதார தடை விதிப்பதற்கு யாரவது ஃபர்ஸ்ட் லுக் விட்டு பார்த்திருப்போமா? ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் மீதான பொருளாதார தடைக்கு ஹாலிவுட் பட ஸ்டைலில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் விட்டுள்ளார்.

இந்த போஸ்டர் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பட பாணியிலும் அதில் இடம்பெற்றுள்ள வாசகமான "சேங்ஷன்ஸ் ஆர் கம்மிங்" (SANCTIONS ARE COMING) ஸாம்பிக்கள் சீரிஸில் வரும் பன்ச் டயலாக்கான "winter is coming." போன்று உள்ளது.

"SANCTIONS ARE COMING," இந்த வரியில் இடம்பெற்றுள்ள ''O'' என்ற எழுத்தில் உள்ள கோடுகள் கேம் ஆஃப் த்ரோன்ஸ் லோகோவை போன்றது. புகை சூழ்ந்த பின்னணியில் ட்ரம்ப் நிற்பது போன்ற போஸ் என அப்படியே ஹாலிவுட் போஸ்டரை போல பொருளாதார தடைக்கு ஃபர்ஸ்ட் லுக் விட்டுள்ளார் ட்ரம்ப்.

ஒபாமா காலத்தில் நீக்கப்பட்டிருந்த தடைகளும் இதில் அடங்கும். மேலும் புதிய தடைகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது, வரும் திங்கட்கிழமை அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேம் ஆஃப் த்ரோன்ஸின் காப்புரிமம் பெற்ற ஹச்.பி.ஓ ''நாங்கள் எங்களது ட்ரேட்மார்க் லோகோவை எந்த அரசியல் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். இது குறித்து நாங்கள் எதுவும் இதுவரை அறியவில்லை" என்று கூறியுள்ளனர். அதிபராவதற்கு முன் டி.வி நிகழ்ச்சிகள் நடத்தி வந்த ட்ரம்புக்கு இதுவும் ஒரு சுய விளம்பரம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

.