Read in English বাংলায় পড়ুন
This Article is From Oct 01, 2018

“அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சை உடனடியாக தொடங்க இந்தியா விரும்புகிறது”- டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதற்காக ட்ரம்ப் இந்தியாவை அடிக்கடி கண்டித்து வருகிறார்.

Advertisement
இந்தியா

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

New Delhi:

அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சை உடனடியாக தொடங்க இந்தியா விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த வாரம் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ட்ரம்ப், அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்ளும் என்று கூறினார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதை தவிர்க்கவே இந்தியா இந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதற்காக ட்ரம்ப் இந்தியாவை அடிக்கடி கண்டித்து வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ இந்தியா போன்ற நாடுகளுடன் நல்லுறவை பேணத்தான் அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்க மேற்கொள்ளும் பதில் நடவடிக்கையை இந்தியா விரும்பவில்லை எனவேதான் நம்முடன் இந்தியா வர்த்தக பேச்சை தொடங்குவதற்கு விரும்புகிறது. நம்மைத் தவிர வேறு எவருடனும் வர்த்தக பேச்சை தொடங்குவற்கு இந்தியாவுக்கு விருப்பம் இல்லை என்றார்.

கடந்த முறை வர்த்தகம் தொடர்பாக பேட்டியளித்த ட்ரம்ப், அமெரிக்க நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வந்த போதிலும், தங்களுடன் வர்த்தக பேச்சை தொடங்குவதற்கு இந்தியா விரும்புவதாக கூறினார். சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கும் - சீனாவுக்கும் இடையே கடும் வர்த்தகப்போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement