Read in English
This Article is From Jan 07, 2019

"கிம்முடன் அடுத்த சந்திப்பு... விரைவில் இடம், தேதி வெளியாகும்" - ட்ரம்ப்

2017ம் ஆண்டு மட்டும் 6 அணுஆயுத சோதனைகளை வெற்றிகரமாக செய்து முடித்தது வடகொரியா.

Advertisement
உலகம்

ட்ரம்ப் மற்றும் கிம் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் சென்ற ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. (File)

Washington:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரிய தலைவர் கிம்முடனான அடுத்த சந்திப்புக்கு எந்த இடத்தை தேர்ந்தெடுப்பது என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் துவங்கி விட்டதாக அறிவித்தார். 

ட்ரம்ப் மற்றும் கிம் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் சென்ற ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதன் பின் அடுத்த சந்திப்பு குறித்த செய்திகள் வெளியான நேரத்தில் கடந்த வாரம் கிம்மிடம் இருந்து ஒரு கடிதம் ட்ரம்புக்கு வந்துள்ளது. அதில் குறிப்பிடப்படுள்ள தகவல்களை வெள்ளைமாளிகை வெளியிட மறுத்துள்ளது.

மேரிலாண்டில் உள்ள கேம்ப் டேவிட்டுக்கு செல்லும் முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ட்ரம்ப், கிம்மை சந்திப்பதற்கான அடுத்த இடம் மற்றும் நேரம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறினார். விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் சந்திப்புக்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. அவர்களும் விரும்பினார்கள், நாங்களும் விரும்பினோம். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று கூறினார். மேலும் ''நான் வடகொரிய தலைவருடன் மறைமுகமாக பேசிவருகிறேன்.  அமெரிக்காவுக்கு நல்ல உறவு இருக்கிறது'' என்றார் ட்ரம்ப்.

சமீபத்திய கடிதத்தில் ''அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தால் அணு ஆயுத ஒப்பந்தங்களில் எங்கள் விருப்பத்தை மாற்றி வேண்டிய சூழல் உருவாகும் என்று எச்சரித்திருந்தார் கிம். சிங்கப்பூரில் நடந்த சந்திப்பிலும் ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்தாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அணுஆயுத கிடங்குகளை மூட வேண்டும் என்று வட கொரியாவை அமெரிக்கா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.  70 வருடங்களாக கிம்மின் குடும்பம் தான் வடகொரியாவை ஆண்டு வருகிறது. 2017ம் ஆண்டு மட்டும் 6 அணுஆயுத சோதனைகளை வெற்றிகரமாக செய்து முடித்தது வடகொரியா. ஆனால் ஒரு வருடமாக அப்படி எந்த ஒரு சோதனையையும் வடகொரியா நிகழ்த்தவில்லை.

Advertisement