Read in English
This Article is From Jan 05, 2019

"சுவருக்காக மாதங்கள் அல்ல வருட கணக்கில் கூட அரசை முடக்குவோம்" - ட்ரம்ப்

ட்ரம்ப், 8 லட்சம் ஃபெடரல் பணியாளர்களிடம் "சம்பளமில்லா விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது சம்பளமில்லாமல் பணிக்கு வாருங்கள். அப்படி செய்தால் நிதியை திரட்டி விடலாம்" என்று கூறினார்.

Advertisement
உலகம் (c) 2018 The Washington PostPosted by

"வலிமையான எல்லையை உருவாக்குவதே பாதுகாப்பு. நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்காக, இதற்கான நிதியை வழங்குங்கள்" என்றார் ட்ரம்ப். 

Washington:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று அளித்த பேட்டியில் மிகப்பெரிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பல மணி நேரம் சட்ட வல்லுனர்களுடன் பேசிய பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "எல்லையில் சுவர்கட்டுவதற்காவும், நாட்டை பாதுகாக்கவும் தான் நாங்கள் இந்த விஷயத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்காக மாதங்கள் அல்ல... வருடக்கணக்கில் கூட அரசு அலுவல்களை முடக்குவோம்" என்றார்.

ட்ரம்ப், 8 லட்சம் ஃபெடரல் பணியாளர்களிடம் "சம்பளமில்லா விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது சம்பளமில்லாமல் பணிக்கு வாருங்கள். அப்படி செய்தால் நிதியை திரட்டி விடலாம்" என்று கூறினார். "வலிமையான எல்லையை உருவாக்குவதே பாதுகாப்பு. நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்காக, இதற்கான நிதியை வழங்குங்கள்" என்றார். 

"நாம் பேசிக்கொண்டிருப்பது நாட்டின் பாதுகாப்பு குறித்தது. நாம் ஒன்றும் விளையாட்டை பற்றி பேசிக்கொண்டிருக்கவில்லை" என்றார் ட்ரம்ப். இதனை அறிவிக்கும் போது துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் இரு வெள்ளை மாளிகை அதிகாரிகள் உடனிருந்தனர். 

Advertisement

மேலும், அரசு அலுவல்களை முடக்குவதை நிறுத்திக்கொள்ளப்போவதில்லை என்ற தொணியிலேயே பதிலளித்தார் ட்ரம்ப். அதில் இந்தப் பிரச்சனை தீர்வு காணும், அல்லது அப்படியே தீர்வு காணப்படாமலும் போகலாம் என்று தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமையன்று நடந்த கூட்டத்தில், இரண்டு வாரங்களாக அரசு அலுவல்கள் முடிக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், அரசு விரைவில் இதனை தீர்வு காண வேண்டும் என்றும் மற்ற கட்சியினர் வலியுறுத்துனர். 18 நாட்களாக அரசை முடக்கும் விஷயம் தான் அமெரிக்க அரசு அலுவல்கள் வரலாற்றிலேயே இரண்டாவது மிக நீளமான போராட்டம் என்று கூறப்படுகிறது. 

  .  

அன்றாட வாழ்க்கையை இந்த அலுவலக முடக்கம் பெரிதாக பாதித்துள்ளது. பல சாலை போக்குவரத்து அதிகாரிகள் வேலைக்கு வரவில்லை. ஏனெனில் அவர்களுக்கு வேலைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று விமான நிலைய யூனியன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விமான நிலைய பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை. மேலும் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வருமான வரி திரும்ப பெறுதலில் தாமதம் உருவாகியுள்ளது. 

Advertisement

5 பில்லியன் டாலர் ரூபாய் செலவில் எல்லையில் சுவர்கட்ட வேண்டும் என்றும் அதற்கான பணத்தை மெக்ஸிகோ தான் தர வேண்டும் என்றும் கூறி வந்தது. ஆனால் இன்னும் அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. 

இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்கூமர் ட்ரம்ப்பிடம் ''விரைவில் அரசு அலுவல்களை மீண்டும் இயங்க வைக்க வேண்டும். இல்லையெனில் அரசை நடத்துவது கடினம்" என்றார்.

Advertisement

இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப் '' நான் ஓரளவுக்கு தான் பொறுத்துக் கொண்டு, காங்கிரஸின் ஒப்புதலுக்காக காத்திருப்பேன். இல்லையெனில் நேரடியாக நானே ஒப்புதல் வழங்குவேன்'' என்று கூறினார். மேலும் எல்லையில் சுவர் கட்டுவதில் தீர்க்கமாக உள்ளதாகவும், அதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement