2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாகாண செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார் ஹீதர் நர்ட்.
Washington: "அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மாகாண செய்தி தொடர்பாளர் ஹீதர் நர்ட்டை ஐநாவுக்கான அமெரிக்க தூதராக பரிந்துரைத்துள்ளார்" என்று இரண்டு வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஒருவரை உலகின் பல்வேறு பிரச்னைகளை பற்றி எப்படி பேசி தீர்வு காண முடியும் என்ற விவாதங்களும் எழுந்துள்ளது. இந்த முடிவு விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற செய்தியும் வெளியா
கியுள்ளது.
நர்ட் பரிந்துரையை செனட் உறுதி செய்ய வேண்டும். நர்ட், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தில் தொகுப்பாளராகவும், நிருபராகவும் இருந்துள்ளார். 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாகாண செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். ட்ரம்பின் பரிந்துரை ஏற்கப்பட்டால், நர்ட் தான் நிக்கி ஹாலேவுக்கு பிறகு அந்த பொறுப்புக்கு வருவார். இந்த வருட இறுதியுடன் நிக்கியின் பதவி காலம் முடிவடைகிறது.
ஒரு மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி கூறுகையில் '' ஐநாவுக்கான அமெரிக்க தூதர் பதவி என்பது அமைச்சரவை பதவி அல்ல" என்று கூறியுள்ளார். இது குறித்து மாகாண துறையும், நர்ட்டும் கருத்து தெரிவிக்கவில்லை.
நர்ட் இதற்கு முன்னதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், சரா சாண்டர்ஸின் வழிதொடரலாக இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் நிக்கியின் அரசியல் அறிவு மற்றும் செயல்பாடு சரியாக இல்லாததால் இவரை அந்த பதவிக்கு பரிந்துரைத்துள்ளனர்.
அமெரிக்காவின் செயல்பாடுகளில் பல்வேறு சோதனைகளை நர்ட் சந்திக்க வேண்டி வரும். மத்திய கிழக்கு நாடுகள், வட கொரிய உறவுகள் போன்ற விஷயங்கள் முதன்மையான சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஐநாவும், மனித உரிமைகள் ஆணைய குழுவில் இருந்து அமெரிக்கா விலகும் என்றார் ட்ரம்ப். அதேபோல் ஐநாவின் அகதிகள் ஏஜென்சிக்கு நிதியை நிறுத்தினார். ஆனால் ஈரான் மற்றும் வடகொரிய விவகாரத்துக்கு மட்டும் ஐநாவை அழைக்கிறார். இந்நிலையில் தான் நர்ட்டை அதிபர் ஐநாவின் அமெரிக்க தூதராக பரிந்துரைத்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)