அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீதான பொருளாதார தடைக்கு ஹாலிவுட் பட ஸ்டைலில் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்ற நவம்பர் மாதம் வெளியிட்டார்.
Washington D.C.: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கேம் ஆஃப் த்ரோன்ஸின் பெரிய ரசிகர் என்பதை நேற்றைய அமைச்சரவை கூட்டத்திலும் நிரூபித்துள்ளார். அமைச்சரவையில், ஈரானுக்கு பொருளாதார தடைகள் விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டபோது "Sanctions Are Coming" என்ற படத்தையும் காட்டியுள்ளனர். "வட கொரியாவின் தடைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஏதும் நடைபெறவில்லை" என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீதான பொருளாதார தடைக்கு ஹாலிவுட் பட ஸ்டைலில் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்ற நவம்பர் மாதம் வெளியிட்டார். இந்தப் போஸ்டர் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பட பாணியிலும், அதில் இடம்பெற்றுள்ள வாசகமான "SANCTIONS ARE COMING," ஸாம்பிக்கள் சீரிஸில் வரும் பன்ச் டயலாக்கான "winter is coming." போன்று இருந்தது.
"SANCTIONS ARE COMING," இந்த வரியில் இடம்பெற்றுள்ள ''O'' என்ற எழுத்தில் உள்ள கோடுகள் கேம் ஆஃப் த்ரோன்ஸ் லோகோவை போன்றது. புகை சூழ்ந்த பின்னணியில் ட்ரம்ப் நிற்பது போன்ற போஸ் என அப்படியே ஹாலிவுட் போஸ்டரை போல பொருளாதார தடைக்கு அறிவிப்பாக்கினார் ட்ரம்ப்.
ஒபாமா காலத்தில் நீக்கப்பட்டிருந்த தடைகளும் இதில் அடங்கும். மேலும், புதிய தடைகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேம் ஆஃப் த்ரோன்ஸின் காப்புரிமம் பெற்ற ஹச்.பி.ஓ ''நாங்கள் எங்களது ட்ரேட்மார்க் லோகோவை எந்த அரசியல் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்" என்று கூறியுள்ளனர்.