This Article is From Jan 03, 2019

ஆப்கனில் நூலகம் அமைத்தால் அங்கு யார் வருவார்கள்? - மோடியை கிண்டல் செய்த ட்ரம்ப்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் தீவிரவாதிகளை அடித்து விரட்டியதை தொடர்ந்து அந்நாட்டை சீர்படுத்துவதற்காக சுமார் ரூ. 21 ஆயிரம் கோடி அளவுக்கு இந்தியா உதவி செய்துள்ளது.

ஆப்கனில் நூலகம் அமைத்தால் அங்கு யார் வருவார்கள்? - மோடியை கிண்டல் செய்த ட்ரம்ப்

ஆப்கனில் நூலகம் அமைக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப மோடி தன்னிடம் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • ஆப்கனில் நூலகம் அமைக்க வேண்டும் என்று ட்ரம்பிடம் மோடி பலமுறை கூறியுள்ளார்
  • நூலகம் அமைத்தால் அங்கு படிப்பதற்கு யார் வரப் போகிறார்கள் - ட்ரம்ப்
  • ஆப்கனின் சீரமைப்புக்காக இந்தியா ரூ. 21,000 கோடிக்கு உதவி
Washington:

ஆப்கானிஸ்தானில் நூலகம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பலமுறை கூறியுள்ளார். இதனை கிண்டல் செய்துள்ள ட்ரம்ப், நூலகம் அமைத்தால் அங்கு யார் படிக்க வருவார்கள். இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அமெரிக்காவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது வெளிநாடுகளின் மறு சீரமைப்பிற்காக குறைந்த அளவு நிதியே ஒதுக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ''இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானில் நூலகம் அமைக்க வேண்டும் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருந்தார். இதனால் என்ன பலன் ஏற்படும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? அப்படியே கட்டினாலும் ஆப்கானிஸ்தானில் யார்வந்து அதனை பயன்படுத்தப் போகிறார்கள்?'' என்று கூறியுள்ளார்.

அவரது பேட்டி, மோடியின் ஆலோசனையை கிண்டல் செய்வது போன்று அமைந்துள்ளது. அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டு படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்த தீவிரவாதிகளை துவம்சம் செய்தது.

இதனால் முற்றிலும் சேதம் அடைந்திருக்கும் ஆப்கானிஸ்தானை புதுப்பிக்க மத்திய அரசு தொடர்ச்சியாக உதவி செய்து வருகிறது. அந்த வகையில் இதுவரைக்கும் சுமார் ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

காபூலில் உள்ள சர்வதேச தரம் மிக்க பள்ளி, மாணவர்களுக்கான உதவித் தொகை, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவை இந்தியாவின் உதவிகளுக்கு சில உதாரணங்கள்.

.