Read in English
This Article is From Nov 16, 2019

அமெரிக்காவில் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது குழந்தையா…? ட்விஸ்டுடன் வெளியான வைரல் வீடியோ

முதலில் பொம்மை எடுத்து வீசப்படுகிறது. அதன்பின் வலுக்கட்டாயமாக நபரை இழுத்து வீசுகிறார். ஒருபெண் ஆவேசமாக எழுந்து போய் ஓட்டுநரைக் கத்துகிறார். கீழே விழுந்தவரைக் காட்டும் போதுதான் தான் தெரிகிறது அது சிறுவன் அல்ல வயது வந்த நபர் என்று

Advertisement
விசித்திரம் Edited by

இந்த வீடியோ 6 மில்லியன் முறை பார்க்கப்பட்டது

நியூயார்க் ஜமைக்கா வீதியில் குழந்தையை வாகனத்திலிருந்து வலுக்கட்டாயமாக தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.   அந்த வீடியோவின் முடிவு தற்போது ட்விஸ்டுடன் வெளியாகி வைரலாகியுள்ளது. 

ஓட்டுநர் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வீசுவது குழந்தையை அல்ல… அவர் ஒரு வயது வந்த உயரம் குறைவான மனிதர் என்பது தெரியவந்துள்ளது. குழந்தை என்று கருதி ஓட்டுநரை திட்டிக் கொண்டிருந்த சமூக ஊடகத்தின் கமெண்டுகள் இந்த இரண்டாவது வீடியோ வந்ததற்கு பின் வெகுவாக மாறியுள்ளது. 

அந்த வீடியோவில், முதலில் பொம்மை எடுத்து வீசப்படுகிறது. அதன்பின் வலுக்கட்டாயமாக நபரை இழுத்து வீசுகிறார். ஒருபெண் ஆவேசமாக எழுந்து போய் ஓட்டுநரைக் கத்துகிறார். கீழே விழுந்தவரைக் காட்டும் போதுதான் தான் தெரிகிறது அது சிறுவன் அல்ல வயது வந்த நபர் என்று தெரிகிறது.

Advertisement

இரண்டு நாட்களுக்கு முன் வந்த வீடியோ 7 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அதற்கு பிறகு ட்விஸ்டுடன் வந்த இந்த வீடியோ 6 மில்லியன் முறை பார்க்கப்பட்டது. பலரும் தங்களின் கமெண்டுகளை திருத்தியுள்ளனர். 

Advertisement

Advertisement