This Article is From Sep 12, 2019

நாள் முழுக்க உற்சாகமாக இருக்க இவற்றை சாப்பிடலாம்!!

சைவ பிரியர்கள் சீஸ் சாப்பிடலாம்.  இதில் உடலுக்கு தேவையான கொழுப்பு சத்து மற்றும் புரத சத்து இருக்கிறது. 

நாள் முழுக்க உற்சாகமாக இருக்க இவற்றை சாப்பிடலாம்!!

ஹைலைட்ஸ்

  • காட்டேஜ் சீஸ் சாப்பிடுவதால் புரத தேவை பூர்த்தியாகிறது.
  • உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க இதனை சாப்பிடலாம்.
  • புரதம் உங்களை நிறைவாக வைத்திருக்கும்.

காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.  நாள் முழுவதற்குமான ஆற்றலை கொடுக்கக்கூடியது காலை உணவு.  தவறாமல் காலை உணவை சாப்பிட்டுவிட வேண்டும்.  உடல் எடை குறைக்க கலோரிகள் குறைந்த உணவுகளை காலை நேரத்தில் சாப்பிட்டு வரலாம்.  உடல் எடை குறைக்க, உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க வேண்டும்.  மெட்டபாலிசத்தை அதிகரிக்கக்கூடிய புரதம் நிறைந்த உணவுகளை பார்ப்போம். 

முட்டை:

காலை உணவிற்கு முட்டை சிறந்தது.  முட்டையில் புரதம் அதிகபடியாக இருப்பதால், உடலுக்கு தேவையான புரத தேவை பூர்த்தியாகிறது.  முட்டையை வேகவைத்து அல்லது ஆம்லெட் செய்து சாப்பிடலாம். 

sl2k71m8

க்ரீக் யோகர்ட்:

க்ரீக் யோகர்ட் சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு நிறைவாக உணர முடியும்.  யோகர்ட்டுடன் ஃப்ரூட்ஸ் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.  பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், காலை உணவில் கட்டாயமாக சேர்த்து கொள்வது நல்லது.  ஆனால் ஃப்ளேவர் மற்றும் சர்க்கரை சேர்த்து யோகர்ட்டை தவிர்த்திடுங்கள். 

பருப்புகள்:

பருப்பு உணவுகளில் புரதம் அதிகம்.  தினமும் ஏதேனும் ஒருவகை பருப்புகளை சாப்பிட்டு வரலாம்.  அத்துடன் பால் சேர்த்தும் ரெசிபிகளை தயாரிக்கலாம்.  இதனால் கால்சியம் சத்தும் கிடைக்கும்.  அத்துடன் நட்ஸ் சேர்த்து கொண்டால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். 

பீனட் பட்டர்:

பீனட் பட்டரை அப்படியே சாப்பிடலாம். ஷேக்ஸ் அல்லது ஸ்மூத்தீஸுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.  பீனட் பட்டர் மற்றும் வாழைப்பழம் சேர்த்து ஸ்மூத்தி செய்து குடிக்கலாம்.  இதில் புரத சத்து அதிகமாக இருக்கிறது. 

8rg30jh8

காட்டேஜ் சீஸ்:

சைவ பிரியர்கள் சீஸ் சாப்பிடலாம்.  இதில் உடலுக்கு தேவையான கொழுப்பு சத்து மற்றும் புரத சத்து இருக்கிறது.  சாண்ட்விச் அல்லது ஓட்ஸில் காட்டேஜ் சீஸ் சேர்த்து சாப்பிடலாம். 

.