Read in English
This Article is From Nov 08, 2019

எனக்கும், திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!!

நாட்டில் இவ்வளவு பிரச்னை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு அதை, இவ்வளவு சர்ச்சையாக்கியது சில்லியாக இருக்கிறது - ரஜினிகாந்த்

Advertisement
தமிழ்நாடு Edited by

, என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள் - ரஜினிகாந்த்

எனக்கும், திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்; ஆனால், நாங்கள் சிக்கமாட்டோம் என நடிகர்  ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது,

திருவள்ளூவர் அவர் ஞானி, சித்தர். ஞானி, சித்தர்களை எந்த மதம், ஜாதிக்குள்ளும் அடைக்க முடியாது. திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர். அதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. அவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர். 

அதனை பாஜக அவர்களது ட்வீட்டரில் காவி உடையுடன் வள்ளுவர் படத்தை வெளியிட்டது அவர்களது விருப்பம். நாட்டில் இவ்வளவு பிரச்னை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு அதை, இவ்வளவு சர்ச்சையாக்கியது சில்லியாக இருக்கிறது.

எனக்கு விருது கொடுத்த அரசுக்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சி. குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தை தொடங்க லதா ரஜினிகாந்த் முதலமைச்சர் சந்திக்க சென்றுள்ளார்.

Advertisement

உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிட வாய்ப்பில்லை. பொன்.ராதாகிருஷ்ணன் உடனான சந்திப்பு சாதாரணமானது தான். அவர் என்னை பாஜகவில் இணையுமாறு வலியுறுத்தவும் இல்லை. 

பாஜக தலைவராக நீங்கள் வரவுள்ளீர்கள் என செய்தி வெளியாகிறதே என கேட்ட கேள்விக்கு, என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி
சாயம் பூசியது போல எனக்கும் பூச முயற்சிக்கிறார்கள். ஆனால் நானும் சிக்கமாட்டேன், திருவள்ளுவரும் சிக்க மாட்டார் என்றார். 
 

Advertisement
Advertisement