This Article is From Dec 24, 2018

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி: 222 பேர் பலி!

இந்தோனேசியாவில் எழுந்துள்ள கடல் அலை சீற்றத்தில் சிக்கி சுமார் 222 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 800க்கும் மேற்பட்டவர்கள் இதில் காயமடைந்துள்ளனர். 28 பேர் வரை காணாமல் போய் உள்ளனர்.

Advertisement
உலகம் Posted by

இந்தோனேசியாவில் எழுந்துள்ள கடல் அலை சீற்றத்தில் சிக்கி சுமார் 222 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 800க்கும் மேற்பட்டவர்கள் இதில் காயமடைந்துள்ளனர். 28 பேர் வரை காணாமல் போய் உள்ளனர்.

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதம் அடைந்திருக்கின்றன.

குறைந்தது 222 பேர் பலியாகி இருப்பதாகவும், 800 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவில் இருக்கும் க்ராகடாவ் எரிமலை வெடித்துச் சிதறியதின் விளைவாக சுனாமி ஏற்பட்டுள்ளாதாக அதிகாரிகள் கூறுகின்றனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது.

Advertisement

கடந்த 2004-ம் ஆண்டின்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு பகுதியில் சுனாமி ஏற்பட்டது. இதில் 2.2 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவண்டீன் பேண்ட் என்ற இசைக்குழு நேற்று பெண்டல்காங் என்ற பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தது. அந்த நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போதே, சுனாமி வந்ததால், அந்நிகழ்வுகள் எல்லாம் தொடர்ச்சியாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. அதில் இருந்து புகை வெளியே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக்குழம்பும் வெளியாகியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையாக அதிர்ந்து குலுங்கியது.

Advertisement

இந்நிலையில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென ராட்சத சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 65 அடி உயரம் அலைகள் எழும்பி கரையை வந்தடைந்தன. இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. ஜாவா தீவில் பான்டென் மாகாணத்தில் உள்ள பான்டெக்லாங் பகுதியையும், தெற்கு சுமத்ராவில் பாண்டர்லாம்பங் நகரையும் தாக்கியுள்ளது.
 

Advertisement