This Article is From May 14, 2019

“நடப்பது அம்மா ஆட்சியே இல்லைங்க!”- டிடிவி தினகரன் புதிய விளக்கம்

திமுக-வும், அமமுக-வும், ’23 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக ஆட்சி இருக்காது’ என்று கூறி வருகின்றன. 

“நடப்பது அம்மா ஆட்சியே இல்லைங்க!”- டிடிவி தினகரன் புதிய விளக்கம்

"தற்போதைய ஆட்சியை கலைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது காலத்தின் கட்டாயம்”

வரும் 23 ஆம் தேதி, தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து 22 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நீடிக்குமா என்பதை நிர்ணயிக்கும். இப்படிப்பட்ட சூழலில் திமுக-வும், அமமுக-வும், '23 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக ஆட்சி இருக்காது' என்று கூறி வருகின்றன. 

இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “இப்போது நடந்து கொண்டிருப்பது அம்மா (ஜெயலலிதா) ஆட்சியே கிடையாது. அம்மா அவர்கள் உருவாக்கிய ஆட்சி. இது துரோகிகள் நடத்தும் ஆட்சி. இந்த ஆட்சியை கவிழ்த்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

திமுக-வில் உறுப்பினராக இருந்து, அக்கட்சி தேர்தலில் வெற்றிபெற பாடுபட்டவர் எம்.ஜி.ஆர். ஆனால், அதற்கு எதிராக அவர் அதிமுக என்ற கட்சியை தொடங்கவில்லை. அவர், அதிமுக என்ற கட்சியைத் தொடங்கியதால், அண்ணாவுக்கு எதிராக செயல்பட்டார் என்று சொல்ல முடியுமா. அப்படிப் பார்த்தால் 1988 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் உருவாக்கிய ஆட்சியை ஜெயலலிதா கலைக்கவில்லையா? 

அதைப் போலத்தான் தற்போதைய ஆட்சியை கலைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது காலத்தின் கட்டாயம்” என்று பேசியுள்ளார்.


 

.