This Article is From Mar 22, 2019

அமமுக-வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் தினகரன்!

தினகரன், எதிர்வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அமமுக-வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் தினகரன்!

முன்னாள் எம்.எல்.ஏ, தங்க தமிழ்செல்வன், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்க உள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்றேக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன், எதிர்வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ, தங்க தமிழ்செல்வன், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்க உள்ளார். 

இன்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தினகரன், 14 லோக்சபா தொகுதிகள் மற்றும் 8 சட்டமன்றத் தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவர் என்ற விபரத்தைத் தெரிவித்தார். 

அதன்படி,
14 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்:

வடசென்னை - சந்தானகிருஷ்ணன்
அரக்கோணம் - பார்த்திபன்
வேலூர் - பாண்டுரங்கன்
கிருஷ்ணகிரி - கணேச குமார்
தருமபுரி - பழனியப்பன்
திருவண்ணாமலை - ஞானசேகர்
ஆரணி - செந்தமிழன்
கள்ளக்குறிச்சி - கோமுகி மணியன்
திண்டுக்கல் - ஜோதிமுருகன்
கடலூர் - கார்த்திக்
தேனி - தங்க தமிழ்செல்வன்
விருதுநகர் - பரமசிவ ஐயப்பன்
தூத்துக்குடி - புவனேஸ்வரன்
கன்னியாகுமரி - லெட்சுமணன்

8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்:

சோளிங்கர் - டி.ஜி.மணி
பாப்பிரெட்டிபட்டி - ராஜேந்திரன்
நிலக்கோட்டை (தனி) - தங்கதுரை
திருவாரூர் - காமராஜ்
தஞ்சாவூர் - ரெங்கசாமி
ஆண்டிப்பட்டி - ஜெயக்குமார்
பெரியகுளம் - கதிர்காமு
விளாத்திகுளம் - ஜோதிமணி
தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) - முருகசாமி

முன்னதாக தினகரன் 24 லோக்சபா தொகுதிகள் மற்றும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதற்கட்ட பட்டியலை வெளியிட்டிருந்தார். 

.