This Article is From Jan 12, 2019

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: துளசி கபார்ட் அறிவிப்பு!

நீதித்துறை சீர்திருத்தம், பருவ நிலை மாற்றம் மற்றும் ஹெல்த் கேர் ஆகியவற்றை தனது முக்கிய பட்டியலில் வைத்திருப்பதாக துளசி கபார்ட் கூறியுள்ளார்.

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: துளசி கபார்ட் அறிவிப்பு!

37 வயதான துளசி கபார்ட், 21 வயதில் செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த துளசி கபார்ட், 2020ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக சிஎன்என்  தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார். 

நீதித்துறை சீர்திருத்தம், பருவ நிலை மாற்றம் மற்றும் ஹெல்த் கேர் ஆகியவற்றை தனது முக்கிய பட்டியலில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். தனது விருப்பத்தை அறிவிக்கும் போது இந்த விஷயங்கள் குறித்து விரிவாக பேசவிருப்பதாகவும் கூறினார். 

37 வயதான துளசி கபார்ட், 21 வயதில் செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நடுவில் பதவியை விட்டு ஈராக்கில் போர் நடக்கும் பகுதியில் பணிபுரிந்தார். 2012ம் ஆண்டு ஜனநாயக கட்சியால் திரும்ப அழைக்கப்பட்டார் துளசி க‌பார்ட். முதல் ஹிந்து பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். "ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கு போட்டியிடுவேன்" என்று முன்பே கூறியிருந்த துளசி, தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். 

''நாடு செல்லும் பாதையை கவனமாக உற்று நோக்குகிறேன். 2020ல் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிடுவதற்கு முன், சொந்த கட்சியில் உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர்களை வெல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது" என்று கூறினார். 

"அன்பைவிட வேறு எந்த சக்தியும் பெரிதல்ல. அன்பால் கட்டமைக்கப்பட்ட அமெரிக்காவை உருவாக்க வேண்டும்" என்றும் கூறினார். 2020 அதிபர் தேர்தலுக்கான அட்டவணைகள் பிப்ரவரி 3, 2020ல் துவங்குகிறது. குடியரசு கட்சி மீண்டும் ட்ரம்ப்பை களமிறக்கவுள்ளது. ஆனால், இன்னும் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர்கள் யார் என்ற முடிவு எட்டப்படவில்லை. 

ஆனால் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன், செனட் உறுப்பினர்கள் எலிசபெத் வாரன், க்றிஸ்டன் கில்லிப்ராண்ட், டிம் கெய்ன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் பெயரும் முன்னிருத்தப்படுகின்றன. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.