முதிய பெண்மணி உடல்நலம் விரைவாக தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்
Coimbatore: கோவையில் 56 வயதான ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 7 கிலோ கட்டியை மருத்துவர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர்.
“ வயிற்றில் பிரச்சினைக்காக பெண்மணி யொருவரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர். அந்த நேரத்தில் கட்டியை அகற்றுவது உயிருக்கு ஆபத்து என்று எண்ணிய மருத்துவர்கள் தற்போது அதை அகற்றியுள்ளதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செந்தில் குமார் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“இந்த கட்டி வயிற்றுப் பகுதி முழுவதும் ஆக்ரமித்து இருந்தது. இந்த கட்டி கருப்பை, வலது சிறுநீரகம் மற்றும் வலது சிறுநீர் குழாய் ஆகியவற்றை அழுத்தியபடி இருந்தது என்றும். இந்த அறுவை சிகிச்சை எங்களுக்கு ஒரு சவாலாக இருந்தது என்று மருத்துவர் தெரிவித்தார்.