சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுது துணைதூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக இன்னும் அனைத்து விஷயங்களையும் துருக்கி வெளியிடவில்லை என்று அநாட்டு அதிபர் ரிசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்து பேட்டியில் '' நாங்கள் இன்னும் அனைத்து விஷயங்களையும் இன்னும் வெளியிடவில்லை. நாங்கள் அதனை முழுமையாக தயாரித்து வருவதாக கூறினார்.
துருக்கியில் தனது இரண்டாவது திருமணத்துக்கான் ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்புல் அமீரகத்துக்கு அக்டோபர் 2ம் தேதி சென்ற ஜமால் கசோக்கி திரும்பவில்லை. அவர் கொல்லப்பட்டதை சர்வதேச அழுத்தம் காரணமாக பின்னர் ஒப்புக் கொண்டனர்.
துருக்கி முன்னதாக கசோக்கியை 15 பேர் கொண்ட குழு வந்து கொன்றதாக கூறியது. உள்ளூரில் அவர்களுக்கு உதவியவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியது.
ரியாத் இந்த விஷயத்தில் பல சவுதி அதிகாரிகளை கைது செய்து விசாரித்து வருகின்றார். வ்ச்ஷிங்டன் போஸ்ட்டில் பத்திரிக்கையாளராக பணியாற்றும் கசோக்கி தொடர்ந்து முகமது பின் சல்மான் குறித்து விமர்சனங்களை முன் வைத்ததால் அவருக்கும் இந்த கொலையில் தொடர்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது.