Read in English
This Article is From Oct 23, 2018

பத்திரிகையாளர் கசோக்கியை திட்டமிட்டு கொன்றுள்ளனர்: துருக்கி அதிபர் கண்டனம்

கொலையில் ஈடுபட்டவர்களை சவுதி அரசு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்

Advertisement
உலகம் (c) 2018 The Washington Post

சவுதி இளவரசர் முகமது சல்மானுக்கு எதிராக எழுதியதால் கசோக்கி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ///

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வந்தார். அவர் தனது கட்டுரையில் சவுதி இளவரசர் சல்மான் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இந்த நிலயில், துருக்கியில் உள்ள தூதரகத்திற்கு கடந்த 2-ம் தேதி சென்றபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். இதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்று புகார்கள் எழுந்தன. சம்பவம் துருக்கியில் வைத்து நடந்ததால் அந்நாட்டு அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
 

இந்த சம்பவத்தில் சவுதியும், துருக்கியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தன. சவுதியில் இருந்து வந்த குழு ஒன்று கசோக்கியை திட்டமிட்டு தீர்த்துக் கட்டியதாக துருக்கி அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கசோக்கியின் மரணம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், “ சவுதி அரேபிய பத்திரிகையாளர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது ஒரு மிருகத்தனமான செயல். இந்த கொலை செய்தவர்களை சவுதி அரசு துருக்கியிடம் ஒப்படைக்க வேண்டும். கசோக்கியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement