Read in English
This Article is From Jun 24, 2018

ஸ்டெர்லைட் அலையிலிருந்து 1300 டன் சல்ப்யூரிக் ஆசிட் வெளியேற்றம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக, 77 டாங்கர்களில் 1300 டன் சல்ப்யூரிக் ஆசிட் வெளியேற்றப்பட்டதாக சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Advertisement
இந்தியா
Tuticorin:

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட கசிவில், இதுவரை 77 டாங்கர்களில் 1300 டன் சல்ப்யூரிக் ஆசிட் வெளியேற்றப்பட்டதாக செய்தியாளர்களிடன் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

கடந்த ஜூன் 17 ஆம் தேதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் இருந்து சல்ப்யூரிக் ஆசிட் கசிவதாக தகவல்கள் வெளியாயின. அதனை அடுத்து, ஊர் மக்கள் அச்சமடைந்தனர்.

கசிவுகளை பார்வையிட, காவல் துறையினர் உதவியுடன் ஸ்டெர்லைட் அதிகாரிகளை ஆலைக்குள் செல்ல அனுமதி தருமாறு மதுரை நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை சார்பாக மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி பொது மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மே 22, 23 அன்று நடந்த கலவரத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.






 
Advertisement
Advertisement