This Article is From Jul 23, 2020

ஆக.1 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

Advertisement
தமிழ்நாடு Posted by

ஆக.1 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆக.1 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மேலும், கடந்த கல்வியாண்டில் நடைபெற வேண்டிய தேர்வுகளும் இன்னும் முடியாமல் உள்ளது. இதனிடையே, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

பள்ளிகள் திறக்க முடியாத நிலை காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. இதைத்தொடர்ந்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

இந்நிலையில், இதுதொடர்பாக ஈரோடு மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 

Advertisement

14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான். பள்ளி பாடத்திட்டங்கள் குறித்த 18 போ் கொண்ட குழுவின் அறிக்கையை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். 

பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பு குறித்து பரிசீலைனை செய்யப்பட்டு வருகிறது. தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்படுவதில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

Advertisement
Advertisement