இது தொடர்பான படம் மற்றும் வீடியோ, ஆன்லைனில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ், ஓக்லஹோமா, கான்சஸ் ஆகிய மாகாணங்களை சமீபத்தில் பல சக்தி வாய்ந்த சுழல் காற்றுகள் தாக்கின. அதில் ஓர் இடத்தில் ‘இரட்டை சுழல் காற்றும்' வீசியுள்ளது. எப்போதாவதுதான் இப்படி இரட்டை சுழல் காற்று வீசும். அப்படிப்பட்ட இயற்கை அதிசயம் கேமராவில் பதிவாகியுள்ளது. க்ளோபல் நியூஸ் தகவலின்படி, இந்த இரட்டை சுழல் காற்று, ஓக்லஹோமா நகரத்துக்கு அருகில் இருக்கும் லோகன் கவுன்டியில் வீசியுள்ளது.
இது தொடர்பான படம் மற்றும் வீடியோ, ஆன்லைனில் வைரலாகியுள்ளது.
ஆனால், இந்த இரட்டை சுழல் காற்றால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் பிபிசி-யிடம் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டை சுழல் காற்றால், பல மரங்கள் வேரோடு சாய்ந்து, சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டாலும், மனித இழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் இந்த அதிவேக சுழல் காற்றினால், பலத்த மழை பெய்துள்ளது.
கடந்த 5 நாட்களில் மட்டும் அமெரிக்காவில் 130 சூறாவளிக் காற்று உருவாகியுள்ளது. இந்த சூறாவளியால் உண்டான கனமழை குறித்தான படங்களை பகிர்ந்துள்ளது ஓக்லஹோமா கவுன்டி ஷெரிஃப் ட்விட்டர் பக்கம்.
வானிலை ஆய்வாளர்கள், அடுத்தடுத்து புயல் காற்று வீசும் என்று எச்சரித்துள்ளனர். இதனால் ஓக்லஹோமாவில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Click for more
trending news