ஹைலைட்ஸ்
- காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் இவர்கள்
- தற்காப்பு கலையில் தொடர் பதக்கங்களை பெற்று வருகிறார்கள்
- பாண்டிச்சேரி முதல்வர் இவர்களை அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்
தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களது வெற்றிகளை சர்வதேச அளவில் கோலோச்சு வருகிறார்கள் என்பதற்கு சான்றாக சமீபத்தில் ஓட்டபந்தையத்தில் வெற்றிகண்ட தமிழ் நாட்டை சேர்ந்த கோமதி விளங்கினார்.
இதைப்போன்று பலர் சிறுவயதில் இருந்தே விளையாட்டு துறையில் சாதனைப்படைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள் அதன் அடிப்படையில் தற்காப்புக் கலைகளில் அடுத்தடுத்து பதக்கம் வென்று வரும் காரைக்கால் இரட்டையர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இந்தியாவில் முதல்முறையாக 7 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்ற இரட்டையர்கள் என்ற சாதனையைச் செய்த காரைக்காலைச் சேர்ந்த ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி , கராத்தே மட்டும் அல்லாமல் பாக்சிங்,ஜூடோ,கும்பு,சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
கடந்த மாதம் கேரளாவில் நடைப்பெற்ற தென்இந்திய பாக்சிங் போட்டியில் ஜீனியர் பெண்கள் பிரிவில் தங்கம் பதக்கமும், ஜீனியர் ஆண்கள் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.
அதேபோல் கராத்தே ,சிலம்பம் உள்ளிட்ட போட்டியிலும் தொடர்ந்து பதக்கங்களை சூடி வருகின்றனர். இவர்களின் கனவு கராத்தே போட்டியில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்று தருவதே என்று மழலைமொழி மாறாமல் கூறுகின்றனர். இந்த இரட்டைகள் இருவரும் சகோதர,சகோதரியாக இருந்தாலும் இருவரும் போட்டி போட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் மலேசிய, சிங்கப்பூர், சென்னை,கேரள, டெல்லி என பல பகுதிகளில் நடைபெரும் போட்டிகளில் பங்கேற்று உள்ளனர்.இவர்களின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
அண்மையில் புதுச்சேரி மாநில துணை ஆளுநர் கிரன்பேடி மற்றும் புதுவை முதல்வர் நாரயணசாமி ஆகியோர் இரட்டையர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். பல்வேறு தரப்பினர் இவர்ளுக்கு ஊக்கம் அளித்தும் பாராட்டுகளை தெரிவித்தும் வருகிறார்கள்.