Read in English
This Article is From Feb 13, 2019

திடீரென குறைந்த‌ லைக், ரீ-ட்விட் : மன்னிப்பு கேட்ட ட்விட்டர்!

உலகின் பல பகுதியிலும், இந்தியாவிலும் ட்விட்டரை பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கில் லைக்குகளும், ரீ ட்விட்களும் கூடுவதையும், குறைவதையும் சுட்டிக்காட்டி பதிவு செய்தனர்.

Advertisement
உலகம்

ட்விட்டரை பயன்படுத்துவோர் தங்கள் கணக்கில் லைக்குகளும், ரீ ட்விட்களும் கூடுவதையும், குறைவதையும் சுட்டிக்காட்டி பதிவு செய்தனர்.

புது டெல்லி:

திடீரென ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் ட்விட்டரில் ஒரு புதிய தடங்கலை சந்தித்துள்ளனர். இந்த தவறை உறுதி செய்துள்ள ட்விட்டர் நிறுவனம் அதை சரி செய்யும் வேலைகள் நடந்து வருகிறது என்றும், விரைவில் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

உலகின் பல பகுதியிலும், இந்தியாவிலும் ட்விட்டரை பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கில் லைக்குகளும், ரீ ட்விட்களும் கூடுவதையும், குறைவதையும் சுட்டிக்காட்டி பதிவு செய்தனர். இது போலி கணக்குகளை நீக்கும் பணியில் நடந்த தவறாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பும் கோரியுள்ளது. அந்த ட்விட் இதோ...

இந்த மாத ஆரம்பத்தில் ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்களில் சிலருக்கு யாரென்றே தெரியாத நபர்களிடமிருந்து ரீ ட்விட் வருவதாக புகார் எழுந்தது. 

Advertisement

பின்னர் அதற்கான தொழில்நுட்ப ரீதியான விளக்கத்தை அளித்தது மட்டுமின்றி அதனை சரி செய்தது ட்விட்டர் நிறுவனம். 

Advertisement