This Article is From Sep 22, 2018

ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் குறுஞ்செய்திகள் கசிவா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

தனிப்பட்ட முறையில் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் மூன்றாம் தரப்பினருக்கு கசிந்திருக்கலாம் என டிவிட்டர் (Twitter) நிறுவனம் தெரிவித்துள்ளது

ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் குறுஞ்செய்திகள் கசிவா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

தற்போது, 336 மில்லியன் ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் உள்ளனர்

San Francisco:

கடந்த ஓராண்டிற்கு மேலாக, சில பயன்பாட்டாளர்கள் தனிப்பட்ட முறையில் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் மூன்றாம் தரப்பினருக்கு கசிந்திருக்கலாம் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘பக்’ (bug) எனப்படும் இந்த மென்பொருள் பிழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டிவிட்டரினுள் நுழைந்தவுடன் அதில் குறுஞ்செய்தி மூலம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையானது 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் நீடித்து வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப்பிழையினால் மொத்தம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை வெளியிடாத அந்நிறுவனம், 336 மில்லியன் ட்விட்டர் பயன்பாட்டாளர்களில், 3 மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பயன்பாட்டாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானோருக்கு மட்டுமே இது பிரச்சனையாக இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

.