வரவிருக்கும் தேர்தல்களில் ட்விட்டரை பயன்படுத்துவோர் 94 சதவீதம் பேர் வாக்களிக்கப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
New Delhi: அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக ட்விட்டர் #PowerOf18 என்ற ஹேஷ்டேக்கை அமைத்து விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதியின் துணைத் தலைவர் மாயா ஹரி கூறுகையில், #PowerOf18 என்ற ஹேஷ்டேக்கை இன்று லான்ஜ் செய்துள்ளோம்.
இந்த பிரசாரம் வரவிருக்கும் தேர்தல்களில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்கு அளிப்பதற்கு தூண்டுவதாக அமையும். இந்த பிரசாரம் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
#PowerOf18 ஹேஷ்டேக் பிரசாரம் தொடர்பாக தேசிய அளவில் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. அதில் 94 சதவீதம் பேர் வரவிருக்கும் தேர்தலில் வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் நபர்களை பார்ட்னர்களாகவும், பிரபலங்களை விளம்பர தூதர்களாகவும் நியமிக்க ட்விட்டர் விருப்பம் தெரிவித்துள்ளது.