Read in English
This Article is From Jul 08, 2018

போலி கணக்குகளை களை எடுக்கும் ட்விட்டர்

போலியான கணக்குகள் முடக்கப்படுவதால், ட்விட்டரைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது

Advertisement
உலகம் (c) 2018 The Washington PostPosted by
San Francisco:

சான் பிரான்சிஸ்கோ: அதிகரிக்கும் போலி கணக்குகளை கட்டுக்குள் கொண்டு வர, சமீபத்தில் தினம் ஒரு மில்லியன் போலி கணக்குகளை முடக்கி அதிரடி காட்டியது ட்விட்டர்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை சேகரித்த தகவல்களின் படி, கடந்த மே மற்றும் மாதங்களில் 70 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படுள்ளதாக தெரிகிறது. இந்த அதிரடி போலி கணக்கு நீக்கம் இந்த மாதமான ஜூலையும் தொடருமாம்.

போலியான கணக்குகள் முடக்கப்படுவதால், ட்விட்டரைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. ட்விட்டர் தளத்தை வரம்பு மீறி பயன்படுத்துவதை நிறுத்தவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“கருத்து சுதந்திரத்திரம் என்பது மற்றவர்களை பாதிக்கக் கூடாது.” என்று ட்விட்டர் பாதுகாப்பு துணை தலைவர் ஹார்வே தெரிவித்தார்.
,
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, அட்வான்ஸ்டு தொழில்நுட்பத்தை ரஷ்யா பயன்படுத்தி, வாக்காளர்களின் மனநிலையை மாற்றும் செயலில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 336 மில்லியன் பயன்பாட்டாளர்கள் ட்விட்டரை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளனர். இமெயில் ஐ.டி, மொபைல் எண் ஆகியவற்றை சரி பார்த்து ட்விட்டர் பயன்பாட்டளர்களில் போலியான கணக்குகளை முடக்க முடியும். ஆனால், ட்விட்டருக்கு அது பெரும் சவாலான பணியாக உள்ளது.

குறிப்பாக, அரசியல் களத்தில் மக்களிடம் மாற்றம் ஏற்படுத்தவும், ட்ரோல் செய்வதற்கும் ட்விட்டர் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2016 - ஆம் ஆண்டு நடைப்பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ரஷ்ய அரசுடன் சம்பந்தப்பட்ட 50,258 கணக்குகள் ட்விட்டரில் இருந்தது கண்டறியப்பட்டு, அதில 3,000-க்கும் அதிகமான டவிட்டர் கணக்குகள் தேர்தல் சமயத்தில் முடக்கப்பட்டன.

தவிர, சந்தேகம் அளிக்கும் வகையில், ட்விட்டர் பயன்பாடு கண்டறியப்பட்டால், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Advertisement