Read in English
This Article is From May 14, 2019

மோடியின் தொலைக்காட்சி நேர்காணலில் புதிய சர்ச்சை! - நெட்டிசன்களின் கழுகு பார்வை!

அண்மையில் வெளியான பிரதமர் நரேந்திர மோடியின், தொலைக்காட்சி நேர்காணலில் மோடி கையில் இருந்த கேள்விகள் அடங்கிய தாளில் பதிலும் இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement
இந்தியா Edited by

மோடியின் கையில் இருந்த தாளில் கேள்விகளுடன் பதில்களும் அடிங்கியிருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

New Delhi:

கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் மோடி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டி ஏற்கனவே பல சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், கழுகு பார்வை கொண்ட ட்விட்டர் பயணாளிகள் அதில் மேலும் புதிய சர்ச்சையை கண்டறிந்துள்ளனர். 

ஏற்கனவே, பாகிஸ்தானின் பால்கோட் தாக்குதலின்போது, இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ராடாரில் இருந்து தப்பித்து வருவதற்கு மேகங்கள் உதவின என பிரதமர் மோடி அந்த தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கூறினார். மேலும் அதற்கான யோசனையையும் தான் அளித்ததாக கூறினார். இதேபோல், 1980ல் தான் டிஜிட்டல் கேமிரா மற்றும் இ-மெயில் ஆகியவற்றை பயன்படுத்தியதாக கூறினார். 

இதனையடுத்து ரேடார் அடிப்படையை தத்துவம் கூட தெரியாதவராக நமது பிரதமர் இருக்கிறார். ஒரு நாட்டின் பிரதமருக்கு இது கூட தெரியவில்லை என்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என ஒரு சிலர் சீரியஸாகவும், அவரின் இந்த கருத்தை கலாய்த்தும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதேபோல், மோடியின் இ-மெயில், டிஜிட்டல் கேமிரா பேச்சையும் நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 

இதுகுறித்து பத்திரிகையாளர் பிரதிக் சின்ஹா, என்பவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மோடியின் தொலைக்காட்சி நேர்காணலில், தேர்தல் பணிகளுக்கு மத்தியிலும் தான் கவிதை எழுதியதாக கூறுகிறார் அது தொடர்பாக தான் எழுதி வைத்த தாள்களை அவர் தேடுகிறார். அப்போது, கேமிரா அவரது கைகளை நோக்கி குலோஸ் அப் செல்கிறது.

அப்போது, அவரது கையில் நடந்த நேர்காணலுக்கான கேள்விகளுடன் பதில்களும் அடங்கிய ஆவணங்கள் இருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது. ஒவ்வொரு கேள்விக்கும் அதன் எதிரிலே உரிய பதில் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, இதனை நெட்டிசன்கள் கலாய்த்த வருகின்றனர்.

இந்நிலையில், இதே தொலைக்காட்சிக்கு இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நேர்காணலில் பங்கேற்க உள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். மேலும், அவர் இதுபோன்ற ஸ்கிரிப்டட் நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்பதாக அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

Advertisement
Advertisement