விமான தளத்துக்கு வெளியே எடுக்கப்பட்ட வீடியோவில், தளத்துக்கு உள்ளே கறுப்பு நிறப் புகை வருவது தெரிகிறது.
Bengaluru: கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூருவில், விமானப் படையைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளன. நாளை பெங்களூருவில், ‘ஏரோ இந்தியா ஷோ' நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விமானப் படையின் சூரிய கிசான் ஏரோபேடிக்ஸ் குழு விமானங்கள் விபத்துக்கு உள்ளாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது.
நமக்கு வந்துள்ள முதற்கட்டத் தகவல்படி, வடக்கு பெங்களூருவின் எலஹங்கா விமான தளத்தில் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. விமானத்தில் இருந்த மூன்றில் இரண்டு விமானிகளும் பத்திரமாக தப்பவிட்டதாக கூறப்படுகிறது. மூன்றாவது விமானி குறித்து தகவல் இல்லை. இந்த விபத்தால், பொது மக்களில் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளாதக கூறப்படுகிறது.
விமான தளத்துக்கு வெளியே எடுக்கப்பட்ட வீடியோவில், தளத்துக்கு உள்ளே கறுப்பு நிறப் புகை வருவது தெரிகிறது.
ஏரோ இந்தியா ஷோ, நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை நடக்கும்.
1996 ஆம் ஆண்டு முதல் ஏரோ இந்தியா ஷோ பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. கடைசியாக ஏரோ இந்தியா ஷோ, 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.