This Article is From May 07, 2020

கொரோனா பாதிப்பால் துணை ராணுவ வீரர்கள் 2 பேர் மரணம்! 191 பேருக்கு பாதிப்பு

எல்லை பாதுகாப்பு படையினருக்கென் தனி பிரத்யேக தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதாக எல்லைப் பாதுகாப்பு படை கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பால் துணை ராணுவ வீரர்கள் 2 பேர் மரணம்! 191 பேருக்கு பாதிப்பு

நேற்று டெல்லி போலீசில் பணியாற்றும் 31 வயதான கான்ஸ்டபிள் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பால் எல்லை பாதுகாப்பு படையில் 2 வீரர்கள் உயிரிழப்பு
  • 2 பேருடன் தொடர்பில் இருந்த 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
  • துணை ராணுவத்தில் முதன்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
New Delhi:

எல்லைப் பாதுகாப்பு படையில் கொரோனா பாதிப்புக்கு முதல் பலி இன்று ஏற்பட்டுள்ளது. இன்று எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேர் கொரோனாவால் உயிரிந்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 41 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லை பாதுகாப்பு படையில் கொரோனா நோய்த் தொற்று 191 ஆக அதிகரித்திருக்கிறது. 

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் காணப்படவில்லை. 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

வீரர்கள் உயிரிழப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், 'எல்லை பாதுகாப்பு படையினர் உயிரிழந்த விவரத்தை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். அவர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் முன் வரிசையில் நின்றவர்கள். இந்த துயரமான தருணத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். 
 

தொற்று ஏற்பட்ட பெரும்பான்மையினருக்கு அவர்கள் பணியில் இருந்தபோது ஏற்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. சமீபத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 41 பேரும் பணியில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லை பாதுகாப்பு படையினருக்கென் தனி பிரத்யேக தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதாக எல்லைப் பாதுகாப்பு படை கூறியுள்ளது. 

நேற்று டெல்லி போலீசில் பணியாற்றும் 31 வயதான கான்ஸ்டபிள் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்க முதலில் ஒரு மருத்துவமனை மறுத்தாக புகார் எழுந்தது. இன்னொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை, கொரோனா அறிகுறிகள் இருந்தும் மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்ததாக புகார் எழுந்திருக்கிறது. 

.