Forest officials have cordoned off the area where the leopard attacked the monk.
Mumbai: கடந்த வாரம் செவ்வாயன்று தியானத்தில் இருந்த துறவியை சிறுத்தை ஒன்று அடித்துக் கொன்றது. சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையை, வெள்ளிகிழமையன்று தொடங்கினர்.
மும்பை அருகே உள்ள டாடோபா அந்தேரி புலிகள் சரணலாத்தில் சுமார் ஒரு மாத காலமாக தியானம் செய்துகொண்டிருந்த ராகுல் வால்க் போதி என்னும் துறவியை, சிறுத்தை ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலை பிரார்த்தனை செய்தபோது கொன்றது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தாக, அந்த துறவிக்கு உணவு எடுத்து சென்ற மற்ற இரண்டு துறவிகள் கூறினர். மேலும் அவர்கள் ராகுல்லை மீட்க செல்லும்போதே அவர் உயிர் பிரிந்தது.
இந்த சம்பவம் குறித்து புலிகள் சரணாயலத்தின் துணை இயக்குனரான கஜேந்திர நர்வானே கூறியதாவது “யாரும் காட்டுக்குள் போகவேண்டாம்" என தெரிவித்தார்.
வனத்துறையினர் 825 கிலோமீட்டர் சுற்றளவை கொண்ட இந்தக் காட்டை சுற்றி தேடுதல் வேட்டை முயற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்கள் சிறுத்தையை பிடிக்க உபகரகணங்களாக இரண்டு கூண்டுகள் மற்றும் கேமரா பொறி ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சிறுத்தை பிடிபட்டால் அது என்ன செய்யப்படும் என தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.