This Article is From Aug 10, 2020

மகாராஷ்டிராவில் இரட்டைத் தலை பாம்பு கண்டுபிடிப்பு: வீடியோ உள்ளே

மகாராஷ்டிராவில் அரியவகை இரட்டைத் தலை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் இரட்டைத் தலை பாம்பு கண்டுபிடிப்பு: வீடியோ உள்ளே

மகாராஷ்டிராவில் மீட்கப்பட்ட இரட்டைத் தலை பாம்பு

மகாராஷ்டிராவில் இரட்டைத் தலையுடன் கூடிய கண்ணாடி விரியன் பாம்பு மீட்கப்பட்டது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகிலுள்ள கல்யாண் கந்தாரே சாலையில் உள்ள  குடியிருப்பு ஒன்றில் பாம்பு புகுந்து விட்டதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், வீட்டிற்குள்ள பதுங்கி இருந்த பாம்பை மீட்டனர். வெளியே எடுக்கும் போது தான் அது இரட்டைத் தலையுடன் கூடிய பாம்பு என்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த பாம்பை மீட்ட வனத்துறையினர், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினர்.

இரட்டைத் தலையுடன் கூடிய கண்ணாடி விரியன் பாம்பு வீடியோவை வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், இது மரபணு மாற்றம் காரணத்தினால் இரட்டைத் தலையுடன் பிறந்திருப்பதாகவும், இவ்வகை பாம்பு உயிர்பிழைப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தக் கண்ணாடி விரியன் பாம்பின் விஷம் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும், இந்த பாம்பு கடித்தால் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்து விடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

வனத்துறை அதிகாரி சுஷாந்தா வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. பரேலில் உள்ள ஹாஃப்கைன் பல்கலைக்கழகத்தில் இரட்டைத் தலை கண்ணாடி விரியன் பாம்பு ஒப்படைக்கப்பட்டது.

Click for more trending news


.