Read in English
This Article is From Jul 14, 2018

திருப்பதி கோவிலுக்கு 13.5 கோடி ரூபாய் நன்கொடை அளித்த இரண்டு பக்தர்கள்

திருப்பதி கோவிலுக்கு 13.5 கோடி ரூபாய் நன்கொடை செலுத்தியுள்ளனர் இரண்டு அமெரிக்க இந்தியர்கள்

Advertisement
தெற்கு
Tirupati:

திருப்பதி: திருப்பதி கோவிலுக்கு 13.5 கோடி ரூபாய் நன்கொடை செலுத்தியுள்ளனர் இரண்டு அமெரிக்க இந்தியர்கள். கோவில் சேவைகளுக்காக நன்கொடை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பாஸ்டன் மாகாணத்தை சேர்ந்த ஆர்எக்ஸ் அட்வான்ஸ்டு என்ற மருந்து நிறுவனத்தின் உரிமையாளரான திரு.ரவி 10 கோடி ரூபாயும், ப்ளோரிடா பகுதியை சேர்ந்த ஜேசிஜி டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஶ்ரீனிவாஸ் 3.50 கோடி ரூபாயும் திருப்பதி உண்டியலுக்கு காணிக்கை செலுத்தியுள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் தொழிற் துறை அமைச்சர் அமர்நாத் முன்னிலையில், திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளை சந்தித்த அமெரிக்க இந்தியர்கள் நன்கொடை பணத்தை காசோலையாக வழங்கினர்.

உலகின் பணக்கார இந்து கோவில் என அழைக்கப்படும் திருப்பதி மலைக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நன்கொடை செலுத்துகின்றனர். பலர் ஆன்லைன் நன்கொடைகள் செலுத்துகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், சமூகம், மதம், இலக்கியம், கல்வி சார்த சேவைகளை திருமலா திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

Advertisement

2018-19 ஆம் ஆண்டிற்கான திருப்பதி கோவிலின் வருமானம் 2,894 கோடி ரூபாயாக இருக்க கூடும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவில் உண்டியலில் மட்டும் 1,156 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement