Read in English বাংলায় পড়ুন
This Article is From Feb 27, 2019

ஜம்மூ காஷ்மீரில் 2 ஜெய்ஷ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்று இந்திய விமானப்படை எல்லைத் தாண்டி பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாத முகாம்களை குண்டு போட்டு அழித்த பின்னர், இந்த என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளது.

சோபியானின் மீமெண்டர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வந்ததை அடுத்து தேடுதல் வேட்டை நடந்துள்ளது. 

தேடுதலின் போது தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து, தேடுதல் வேட்டை இரு தரப்புக்கும் இடையிலான என்கவுன்ட்டராக மாறியது. இதில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நேற்று தாக்குதல் நடத்தியது.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 12 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது.

Advertisement

சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘இந்திய தேவையில்லாமல் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட இடத்தில் அத்துமீறியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும்' என்று கருத்து கூறியுள்ளார். 

Advertisement

மேலும் நேற்று முதல் ஜம்மூ காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தரப்பினர் அத்துமீறி வருவதாக கூறப்படுகிறது. 
 

 

Advertisement

மேலும் படிக்க - "தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்"

Advertisement