This Article is From Mar 17, 2020

கர்நாடகாவில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில், மாநில அரசால் நிர்வகிக்கப்படும் மருத்துவக்கல்லூரியில் தனி அறை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகாவில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

10 pகர்நாடகாவில் இதுவரை 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (File photo)

ஹைலைட்ஸ்

  • கர்நாடகாவில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு
  • கர்நாடகாவில் இதுவரை 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி
  • மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனி அறை
Bengaluru:

கர்நாடகாவில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, கர்நாடகாவில் மேலும், 2 பேருக்கு புதிதாக கொரோனா #COVID2019 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இருவரும் இதற்கான உரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் 20 வயது பெண், லண்டனிலிருந்து திரும்பியவர். மற்றொருவர் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்தவர் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில், மாநில அரசால் நிர்வகிக்கப்படும் மருத்துவக்கல்லூரியில் தனி அறை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 17 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் மருத்துவமனையும் சேர்ந்து அமைந்துள்ளது. 

இதுபோன்ற மருத்துவக்கல்லூரிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகளில் கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரிகளின் இயக்குநர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, ஒவ்வொரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், தனித்தனியாக 150-200 படுக்கைகள் கொண்ட தனி அறை உருவாக்கப்படும் (இதுபோன்ற நிகழ்வுகளைச் சமாளிக்க)" என்று அவர் கூறினார்.

மீதமுள்ள 13 மாவட்டங்களில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுடனும் அரசு கைகோர்த்துக் கொள்ளும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

.