This Article is From Jan 06, 2019

2019ல் ஏற்படும் 5 கிரகணங்களில், 2 கிரணங்கள் இந்தியாவில் தென்படும்: வானியல் மையம் தகவல்

டிசம்பர் 26ஆம் தேதி சூரிய வளிமண்டலத்தின் (வட்ட வடிவ) சூரிய கிரகணம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

2019ல் ஏற்படும் 5 கிரகணங்களில், 2 கிரணங்கள் இந்தியாவில் தென்படும்: வானியல் மையம் தகவல்

5 கிரகணங்களில், 2 கிரணங்கள் இந்தியாவில் தென்படும்.

Indore:

2019ம் ஆண்டில் 5 கிரகணங்கள் தென்படும் என்றும் இதில் இந்தியாவில் 2 கிரணங்கள் தென்படும் என்று வானியல் கூர்நோக்கு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 6-ம் தேதி ஒரு பகுதி சூரிய கிரகணத்துடன் தொடங்கும் என்றும், இது இந்தியாவில் தெரியாது என்றும் உஜ்ஜைன்-சார்ந்த ஜீவாஜி வானியல் ஆய்வு மைய, கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

முழு சந்திர கிரகணம், வரும் ஜனவரி 21-ஆம் தேதியில் நிகழவிருக்கிறது. பகல் நேரத்தில் நிகழும் இந்த சந்திர கிரணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.

இதைத்தொடர்ந்து ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில் இரவு நேரம் நடைபெறும் முழு சூரிய கிரகணத்தையும் இந்தியாவில் பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு பகுதி சந்திர கிரகணம் ஜூலை 16, 17 தேதிகளில் ஏற்படும் என்றும் இதனை இந்தியாவில் பார்க்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 26ஆம் தேதி சூரிய வளிமண்டலத்தின் (வட்ட வடிவ) சூரிய கிரகணம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2018ஆம் ஆண்டில் மொத்தம் 5 கிரகணங்கள் ஏற்பட்டதாகவும், இதில் 2 முழு சந்திர கிரகணமும், 3 பகுதி சூரிய கிரகணமும் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

.